sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

போதை தடுக்க புதிய தொழில்நுட்பம் கர்நாடக போலீஸ் துறை திட்டம்

/

போதை தடுக்க புதிய தொழில்நுட்பம் கர்நாடக போலீஸ் துறை திட்டம்

போதை தடுக்க புதிய தொழில்நுட்பம் கர்நாடக போலீஸ் துறை திட்டம்

போதை தடுக்க புதிய தொழில்நுட்பம் கர்நாடக போலீஸ் துறை திட்டம்


ADDED : ஏப் 19, 2025 05:26 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: போதைப்பொருள் ஒழிப்பில் என்.சி.பி., உருவாக்கிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, கர்நாடக போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகா உட்பட நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சட்டவிரோதமாக செயல்படும் 'டார்க் வெப்சைட்' வழியாக போதைப்பொருட்கள் வாங்குவது அதிகரிக்கிறது.

பார்சல்கள், கூரியரில் போதைப்பொருட்கள் சப்ளை செய்கின்றனர். 2047ம் ஆண்டு வேளையில், போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில், என்.சி.பி., அதிநவீன வெப் அடிப்படையிலான ஜியோ ஸ்பேஷியல் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. இதை பயன்படுத்த கர்நாடக போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

பயிர்களுக்கு நடுவில் சட்டவிரோதமாக விளைவிக்கப்படும் கஞ்சா, அபீமை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடித்து அழிக்க, இந்த தொழில்நுட்பம் உதவும். என்.சி.பி., செயலி பயன்படுத்தி, கஞ்சா, அபீமை அழிப்பது குறித்து, மாநிலத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களின் போலீசாருக்கு, ஆன்லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

டெபுடி எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உட்பட விசாரணை அதிகாரிகளின் செயல் திறனை அதிகரிக்க, என்.சி.பி., ஒருங்கிணைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடத்தி, தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது.

சாட்டிலைட் மூலமாக, கஞ்சா, அபீம் விளைவிக்கப்பட்ட இடத்தின் படங்களை பதிவு செய்து, 'மேப் டிரக்ஸ் ஆப்'பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனால் எந்தெந்த பகுதிகளில், போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை உற்பத்தி செய்வது யார், எந்த அளவுக்கு உற்பத்தி செய்துள்ளனர் என்பது பற்றிய தகவல் போலீசாரிடம் இருக்கும். அந்த இடங்களை கண்காணித்து, மீண்டும் போதைபொருட்கள் பயிரிடுவதை தடுக்கலாம்.

இதுகுறித்து, மாநிலத்தின் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சைபர் குற்றங்கள் மற்றும் நார்கோடிக்ஸ் பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மாநிலத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, அபீம் பயிரிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யும் அதிகாரிகள், கட்டாயமாக 'மேப் டிரக்ஸ் ஆப்'பில் டேட்டாவை பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 போதைப்பொருள் வழக்கில் அவ்வப்போது சிக்கும் வெளிநாட்டு நபர்களை கைது செய்து, ஓராண்டு வரை சிறை தண்டனை விதிப்பது

 சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை கண்டுபிடித்து, நாடு கடத்துவது

 போதைப்பொருள் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 1908 எண் துவக்கம்

 போதைப்பொருட்களின் பின் விளைவுகள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். கூட்டங்கள் நடத்துகின்றனர்

 பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, உரையாற்றுகின்றனர்

 கிரிப்டோ கரென்சி பயன்படுத்தி, 'டார்க் வெப்'பில் போதைப்பொருள் வாங்குவோரை கண்காணிக்கின்றனர்.

போலீசாரின் நடவடிக்கை








      Dinamalar
      Follow us