/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக விபத்துகள் கர்நாடகாவுக்கு ஐந்தாவது இடம்
/
அதிக விபத்துகள் கர்நாடகாவுக்கு ஐந்தாவது இடம்
ADDED : செப் 02, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : நாட்டின் மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் தரை போக்குவரத்துத் துறை, நாட்டின் மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலை, நேற்று வெளியிட்டது.
இதில் கர்நாடகா ஐந்தாவது இடத்தில் உள்ளது. துறை வெளியிட்டுள்ள 2023ன் புள்ளி விபரங்களின்படி, 43,440 சாலை விபத்துகள் நடந்தன; 12,321 பேர் உயிரிழந்தனர்.
மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களின் பட்டியலில், பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது.