/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் 3 வாரங்களில் மேலும் ஒரு ரயில்
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் 3 வாரங்களில் மேலும் ஒரு ரயில்
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் 3 வாரங்களில் மேலும் ஒரு ரயில்
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் 3 வாரங்களில் மேலும் ஒரு ரயில்
ADDED : செப் 02, 2025 05:44 AM
பெங்களூரு: 'ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் புதிதாக ஒரு ரயில் இயக்கப்படும்' என, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 10ம் தேதி துவங்கியது. இந்த வழித்தடத்தில், 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன; 25 நிமிட இடைவெளியில் மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், பயணியர் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பயணியர் பயணம் செய்கின்றனர்.
வார நாட்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காலை நேரங்களை விட, மாலை நேரங்களில் பயணியர் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்புவுதற்காக பலரும் மெட்ரோவை தேர்வு செய்கின்றனர்.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் மஞ்சள் வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் இயக்கத்தி ற்கு வரும். ரயில்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கும். இதன் மூலம், பயணியரின் எண்ணி க்கை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.