தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ' சோலார் சார்ஜிங்' மையங்கள் அமைக்க கர்நாடக மாநில மின்சார துறை திட்டம்

 ' சோலார் சார்ஜிங்' மையங்கள் அமைக்க கர்நாடக மாநில மின்சார துறை திட்டம்

 ' சோலார் சார்ஜிங்' மையங்கள் அமைக்க கர்நாடக மாநில மின்சார துறை திட்டம்


ADDED : மே 28, 2026 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால், மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்டு, சோலார் மின்சாரம் அடிப்படையிலான சார்ஜிங் மையங்கள் அமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, மின்சார துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே பலரும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களுக்கு மாறுகின்றனர். சரக்குகளின் போக்குவரத்துக்கும், எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதும், முக்கியமான காரணமாகும்.

சார்ஜிங் சென்டர்களில், சார்ஜிங் செய்து கொள்ளும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக மின்சார பயன்பாடு அதிகரிக்கிறது. ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், மின்சார பயன்பாடு, 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெங்களூரு உட்பட, தேசிய நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும்படி, கோரிக்கை வலுத்துள்ளது. ஏற்கனவே மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

சார்ஜிங் மையங்கள் அமைத்தால் மின் தேவை, மே லும் அதிகரிக்கும். இதை சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். இதை மனதில் கொண்டு, சோலார் மின் சக்தி அடிப்படையிலான சார்ஜிங் மையங்கள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில், சோலார் மின் சக்தி அடிப்படையிலான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகில், ஏற்கனவே ஒரு சோலார் மின் சக்தி சார்ஜிங் மையம் உள்ளது.

தற்போது இரண்டாவது மிகப்பெரிய சார்ஜிங் மையம் அமைக்கப்படும். இது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் 30 நிமிடத்தில் வாகனம் முற்றிலுமாக, சார்ஜிங் ஆக வேண்டும் என, விரும்புகின்றனர். எனவே, அதிக அளவில் சோலார் பேனல்கள் பொருத்த வேண்டியுள்ளது.

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் உட்பட, 8,000 இ.வி., சார்ஜிங் மையங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மையங்கள், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us