/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக தமிழ் அமைப்பு 9ல் கலந்தாய்வு கூட்டம்
/
கர்நாடக தமிழ் அமைப்பு 9ல் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 07, 2025 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீராமபுரம் : கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சர்பில் வரும் 9ம் தேதி கர்நாடக தமிழ் அமைப்புகளின் கலந்தாய்வு குழு கூட்டம் நடக்கிறது.
கர்நாட க தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ஸ்ரீராமபுரம் சாய்பாபா நகரில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் கர்நாடக தமிழ் அமைப்புகளின் கலந்தாய்வு குழு கூட்டம், வரும் 9 ம் தேதி மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை நடக்கிறது.
இக்கூட்டத்துக்கு கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் கல்விக்காக பாடுபடும் அனைத்து அமைப்புகளும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும்படி சங்கத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.