/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக தொழிற்பயிற்சி மையம் நமிபியாவில் அமைக்க ஆலோசனை
/
கர்நாடக தொழிற்பயிற்சி மையம் நமிபியாவில் அமைக்க ஆலோசனை
கர்நாடக தொழிற்பயிற்சி மையம் நமிபியாவில் அமைக்க ஆலோசனை
கர்நாடக தொழிற்பயிற்சி மையம் நமிபியாவில் அமைக்க ஆலோசனை
ADDED : மே 13, 2025 01:09 AM

பெங்களூரு, ''ஆப்பிரிக்காவின் நமிபியாவில் கர்நாடக அரசின் தொழிற்பயிற்சி மையம் அமைக்க, ஆப்ரிக்கா இந்தியா பொருளாதார அறக்கட்டளையுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின் நமிபியாவில் கர்நாடக அரசின் தொழிற்பயிற்சி மையம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொழிற்பயிற்சியில், இந்தியா - ஆப்ரிக்கா ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் ஒரு படியாக, ஜி.டி.டி.சி., எனும் ஆப்ரிக்கா - இந்தியா பொருளாதார அறக்கட்டளையை, முக்கிய அறிவு, தொழில்நுட்ப கூட்டாளி நிறுவனமாக மாற்ற முன்வந்து உள்ளது.
ஆப்ரிக்காவின் தொழில்துறை பயிற்சி தேவைக்கு ஏற்ப, ஜி.டி.டி.சி.,யை சிறந்த, வலுவானதாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான ஜி.டி.டி.சி., அமைப்பு, 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டதாகும். மாநிலம் முழுதும் 20க்கும் மேற்பட்ட மையங்களை கொண்டுள்ளது.
மெக்கட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அமைப்பு மூலம், ஆப்பிரிக்க சூழல்களுக்கு எளிதாக மாற்றி அமைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.