/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வென்ற கர்நாடகா
/
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வென்ற கர்நாடகா
ADDED : டிச 16, 2025 05:23 AM
பெங்களூரு: மத்திய அரசிடம் இருந்து, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை கர்நாடகா பெற்று உள்ளது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் டில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாநில எரி சக்தி திறன் செயல்திறன் விருது பிரிவின் கீழ், கர்நாடக மின்சார துறை உட்பட்ட கர்நாடக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கு, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது கிடைத்தது.
இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து, கர்நாடக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவன தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜே கவுடா, நிர்வாக இயக்குனர் ருத்ரய்யா ஆகியோர் பெற்று கொண்டனர். தேசிய எரிசக்தி பாதுகாப்பில் மஹாராஷ்டிராவை விட கர்நாடகா முன்னணியில் இருப்பதாகவும், இந்த விருது எரிசக்தி திறன் திட்டங்களை அங்கீகரிப்பதாக உள்ளதாக மின்சார அமைச்சர் ஜார்ஜ் கூறி உள்ளார்.

