கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தீபிகா ரெட்டி நீக்கம்
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தீபிகா ரெட்டி நீக்கம்
ADDED : மே 17, 2026 11:30 PM

பெங்களூரு: கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தீபிகா ரெட்டி உட்பட 15 பேர் அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தீபிகா ரெட்டி, மாநில பொது செயலர்கள் பிரான்சிஸ் பெனிட்டோ, பிந்து கவுடா, சுமன் சோமசேகர், அப்னன்கானம், லட்சுமி, வாணி காம்ப்ளே, தட்சிணா மூர்த்தி. கட்சியின் மாநில செயலர்கள் சையது உசேன் காத்ரி, சந்த் பாஷா, கோவர்த்தன், பவன் சாலியன், நவீன்குமார் ஆகியோர், தங்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பாடுகளில் பங்கேற்காதது, செயலற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, இவர்கள் 15 பேரையும் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
