/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை... சரிவு!: முதியோர் அதிகரிப்பதாக 'மாதிரி பதிவு முறை'யில் தகவல்
/
கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை... சரிவு!: முதியோர் அதிகரிப்பதாக 'மாதிரி பதிவு முறை'யில் தகவல்
கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை... சரிவு!: முதியோர் அதிகரிப்பதாக 'மாதிரி பதிவு முறை'யில் தகவல்
கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை... சரிவு!: முதியோர் அதிகரிப்பதாக 'மாதிரி பதிவு முறை'யில் தகவல்
ADDED : செப் 11, 2025 11:36 PM

கர்நாடகாவில் சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறித்து, 'ரிஜிஸ்டர் ஆப் இந்தியா' எனும் இந்திய பதிவாளர் சார்பில், 'எஸ்.ஆர்.எஸ்., எனும், 'மாதிரி பதிவு முறை' ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது ஆய்வு முடிந்து, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 1991ல், கர்நாடகாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை, 36.3 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023ன் ஆய்வுப்படி, இந்த எண்ணிக்கை 24.2 சதவீதமாக குறைந்து உள்ளது. இதே வேளையில், 60 மற்றும் 60க்கும் மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது, வயதானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதுபோன்று, மாநிலத்தில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிராமங்களில் உழைக்கும் ஆண்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ள அதேவேளையில், பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுபோன்று நகர் பகுதிகளில் உழைக்கும் ஆண்கள், பெண்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, 2022ல் 4 வயது வரையிலான சிறார்களில், சிறுவர்கள் எண்ணிக்கை கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் ஓரளவு அதிகரித்துள்ளது. நகர்ப்பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தேசிய அளவில் ஒப்பிடும் போது, கர்நாடகாவில் ஆண், பெண் என, இரண்டு பாலின சிறார்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
நகர்ப்புறம், கிராமப்புறங்களில், 14 வயதான ஆண், பெண் சிறார்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆண், பெண் இடையேயான இடைவெளி தென்படுகிறது. தேசிய அளவுடன் ஒப்பிடுகையில், 14 வயதுடைய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், 15 முதல் 59 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த வயதுடைய ஆண்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் ஒப்பிடும் போது, கர்நாடகாவில் உழைக்கும் வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்கள், பெண்களில் முறையே 2.5 சதவீதம் மற்றும் 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகை, குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, பெண்கள் அதிகரித்து உள்ளனர். கர்நாடகாவில் கிராமப்புறங்களில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மூதாட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 1991 உடன் ஒப்பிடும் போது, மாநிலத்தில் திருமணமான பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதுபோன்று விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
அதுபோன்று நாட்டிலும், கர்நாடகாவிலும் திருமணம் ஆகாதவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. அதேவேளையில் திருமணம் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குழந்தை திருமணங்களும் குறிப்பிட்ட அளவு குறைந்து உள்ளது. 2023ம் ஆண்டு தரவுகளை பார்க்கும் போது, 18 வயதுக்கு உட்பட்ட திருமணங்களில் குறிப்பிட்ட அளவு குறைந்து உள்ளது.
கிராமப்புறங்களில், 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 21 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்களின் திருமண வயது அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.