/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அரசு... ஒப்புதல்!; முதல்வர் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் 'திடுக்'
/
கர்நாடகாவின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அரசு... ஒப்புதல்!; முதல்வர் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் 'திடுக்'
கர்நாடகாவின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அரசு... ஒப்புதல்!; முதல்வர் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் 'திடுக்'
கர்நாடகாவின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அரசு... ஒப்புதல்!; முதல்வர் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் 'திடுக்'
ADDED : ஆக 20, 2025 11:43 PM

பெங்களூரு: காங்கிரஸ் அரசு தனது ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த 2023 - 24ம் ஆண்டு, 63,000 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. இதனால் நிதி பற்றாக்குறை அதிகரித்து, உள்கட்டமைப்புக்கான செலவினங்கள் குறைந்து உள்ளதாக, சி.ஏ.ஜி., எனும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்து, மாநிலத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, 2023 மே 20ல் ஆட்சிக்கு வந்தது. தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி, ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியது.
இது தொடர்பான சி.ஏ.ஜி., எனும் தலைமை கணக்காளர் ஜெனரல் அறிக்கையை, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார்.
நிதி ஒதுக்கீடு அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் கிரஹ லட்சுமி திட்டத்துக்கு, 16,964 கோடி ரூபாய்; 200 யூனிட் இலவச மின்சார திட்டமான கிரஹ ஜோதிக்கு 8,900 கோடி ரூபாய்; அன்ன பாக்யாவுக்கு 7,384 கோடி ரூபாய்; அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டத்தக்கு 3,200 கோடி ரூபாய்.
பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் உதவித்தொகைக்கு 88 கோடி ரூபாய் என, அரசு 2023 - 24ல் 36,536 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இதன் மூலம் 2022 - 23ம் ஆண்டு, 46,623 கோடி ரூபாயாக இருந்த நிதி பற்றாக்குறை, 2023 - 24ல் 65,522 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதனை ஈடு செய்ய, 63,000 கோடி ரூபாய் அரசு கடன் வாங்கி உள்ளது. இது, கடந்தாண்டு வாங்கிய 26,000 கோடியை விட, 37,000 கோடி ரூபாய் அதிகமாகும்.
மேலும், வாக்குறுதி திட்டத்தால், உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவினத்தில், 2022 - 23ம் ஆண்டை விட, 5,229 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இத்திட்டத்தால், அரசுக்கு கடந்தாண்டை விட, நடப்பாண்டு, 12.54 சதவீதம் செலவீனம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய், 9,271 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
பகுத்தறிவு செய்யாமல், ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவது, மாநிலத்தின் வருவாயில் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, கடனும் அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
மீள முடியாது இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாநிலத்தின் நிதி பற்றாக்குறை, கடந்த 2022 - 23ல் இருந்த 46,623 கோடி ரூபாயில் இருந்து நடப்பு 2023 - 24ல் 65,522 கோடி ரூபாயாக ஆபத்தான முறையில் உயர்ந்து உள்ளது.
காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டத்தால், மாநிலத்தின் நிதி குறைந்து, கர்நாடகத்தை மீள முடியாத அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
இதை ஈடுகட்ட, மாநில அரசு 63,000 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. இது கடந்தாண்டு பெற்ற கடனை விட, 37,000 கோடி ரூபாய் அதிகமாகும்.
பொறுப்பற்ற முறையில் பெற்ற கடனால், அதை திருப்பி செலுத்துவது மட்டுமின்றி, வட்டியும் பெருமளவு அதிகரித்து உள்ளது. இது மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும்.
சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கான மூலதன செலவு, 5,229 கோடி ரூபாய் குறைந்து உள்ளது. இதன் விளைவாக, முழுமை அடையாத திட்டங்கள், 68 சதவீதம் அதிகரித்து உள்ளது.
அதாவது முக்கிய பணிகள், பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன. மூலதனம் உருவாக்குவதில் ஏற்பட்ட சரிவு, கர்நாடகாவின் எதிர்கால வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று சி.ஏ.ஜி., எச்சரிக்கிறது.
வளர்ச்சிக்கு தடை கொரோனாவுக்கு பின், 2022 - 23ல் மந்த நிலையில் இருந்து மீண்ட கர்நாடகாவுக்கு, தற்போது 2023 - 24ல் மீண்டும் 9,271 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலைக்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் அரசின் அறிவியல் பூர்வமற்ற வாக்குறுதி திட்டங்கள், தவறான பொருளாதார நிர்வாகமே காரணம்.
தற்போதுள்ள மானியங்களை ஒழுங்குபடுத்தாவிட்டால், வாக்குறுதி திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து, கடன் சுமை அதிகரிக்கும். இன்றைய வாக்குறுதிகள், நாளைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
தான் தாக்கல் செய்த பட்ஜெட்களின் எண்ணிக்கை பற்றி பெருமையாக பேசி, தன்னை பொருளாதார மேதை என்று மார்தட்டி கொள்வது முதல்வர் சித்தராமையாவின் வழக்கம்.
அவர் எத்தனை பட்ஜெட்களை தாக்கல் செய்தார் என்பது முக்கியமல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எத்தனை பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது தான் முக்கியம். இதை அவர் உணர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
சித்தராமையா அசோக்