/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் கருண் நாயர்
/
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் கருண் நாயர்
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் கருண் நாயர்
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் கருண் நாயர்
ADDED : ஜூலை 24, 2025 11:29 PM

கர்நாடகாவை சேர்ந்தவர் கருண் நாயர், 33. இவர் 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கி, முச்சதம் விளாசினார். இதன் மூலம் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமானார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பேரும், புகழும் கிடைத்தது. ஆனால், இதை அவரால் தக்க வைக்க முடியவில்லை. இதற்கு காரணம், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததே; அதனால், வாய்ப்பே கிடைக்காமல் போனது. மிகுந்த விரக்தியில் இருந்த கருண் தன் எக்ஸ் பக்கத்தில், 'டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு' என உருக்கமாக பதிவிட்டார்.
ஜொலிக்கவில்லை இது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை துளைத்து எடுத்தது. கருணுக்கு வாய்ப்பு வழங்கலாமே என பலரும் பி.சி.சி.ஐ.,யை வெளுத்து வாங்கினர். இதையடுத்து பல போராட்டங்களுக்கு பின், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியில் தோன்றினார்.
தற்போது மான்செஸ்டரில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார். ஆனால், பெரிதாக ரன் அடிக்கவில்லை. இதனால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து கருண் நீக்கப்பட்டார்.
இதனால், மிகுந்த மனச்சோர்வில் கருண் உள்ளார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலரும் இணையத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கருண் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணடித்து விட்டதாகவும் கூறி உள்ளார்.
குட் நியூஸ் இந்திய அணியில் இருந்து கருண் துாக்கி அடிக்கப்பட்டதால், அவரது ஆட்டத்தை காண முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வந்து உள்ளது.
அது என்னவென்றால், கருண் நாயர் மீண்டும் கர்நாடக அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு கருண் விளையாடி கொண்டிருந்த விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஒப்புதல் அளித்து உள்ளது.
இதனால், மீண்டும் உள்ளூர் போட்டிகளில் கருண், கர்நாடகா அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும். இதை நினைத்து அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்
- நமது நிருபர் -.