தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மலையேற்ற விரும்பிகளுக்கு கவிகல் கண்டி வியூ பாயின்ட்

 மலையேற்ற விரும்பிகளுக்கு கவிகல் கண்டி வியூ பாயின்ட்

 மலையேற்ற விரும்பிகளுக்கு கவிகல் கண்டி வியூ பாயின்ட்


ADDED : ஆக 05, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

சிக்கமகளூரு மாவட்டம், சந்திர துரோணா மலை தொடரில் அமைந்துள்ளது கவிகல் கண்டி வியூ பாயின்ட்.

சிக்கமகளூரு நகரில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் முல்லையனகரி மற்றும் பாபா புடன்கிரி செல்லும் பாதையில் இப்பகுதி அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாகும்.

மலையில் ஏறும் போது மலைப்பாதையை சுற்றிலும் உள்ள பசுமையான பள்ளத்தாக்குகளின் அழகை காணலாம்.

மலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள 50 படிகள் ஏறினால், இந்த வியூ பாயின்டை அடையலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாக சென்று வரலாம். காலை 6:00 முதல், மாலை 6:00 மணி வரை பார்க்கலாம்.

மலையின் அடிவாரத்தில் சிறிய ஹனுமன் சிலையும், மலை உச்சியில் சுவாமி விவேகானந்தரின் ஓவியமும் வரையப்பட்டு உள்ளன. வியூ பாயின்டில் நின்றபடி, சந்திர துரோணா மலை தொடரை காணலாம்.

மழை காலத்துக்கு பின், அக்டோபர் முதல், மார்ச் வரை இதன் அழகை கண்டு ரசிக்கலாம். கார், பைக் மூலமும் எளிதாக இங்கு செல்லலாம். மலையேற்றத்தின் போது, தேவையான உபகரணங்களை எடுத்து செல்லவும்.

இது தவிர, இதன் அருகிலேயே அய்யனகெரே, சீதாலயனகிரி, முல்லயனகிரி, ஹொன்னம்மனா ஹல்லா, பாபா புடன்கிரி, மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி போன்ற மற்ற சுற்றுலா இடங்களும் உள்ளன. இவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

எப்படி செல்வது?

 விமானத்தில் செல்வோர், மங்களூரு சர் வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 171 கி.மீ., தொலைவில் உள்ள வியூ பாயின்டுக்கு செல்லலாம்  ரயிலில் செல்வோர், சிக்கமகளூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 28 கி.மீ., தொலைவில் உள்ள வியூ பாயின்டுக்கு செல்லலாம்  பஸ்சில் செல்வோர், சிக்கமகளூரு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள வியூ பாயின்டுக்கு செல்லலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us