தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நவம்பரில் கெம்பேகவுடா விழா

நவம்பரில் கெம்பேகவுடா விழா

நவம்பரில் கெம்பேகவுடா விழா


ADDED : செப் 07, 2025 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாகடி : ''பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடாவின் விழா, நவம்பரில் மாகடியில் கொண்டாடப்படும்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறினார்.

மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரு நகரம், இன்று உலக அளவில் பெயர் பெற்று உள்ளது. பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடா தான், இதற்கு முழு காரணம். அவருக்கு மரியாதை செல்லும் விதமாக, நவம்பரில் கெம்பேகவுடா விழா மாகடியில் கொண்டாடப்படும். தேதியை விரைவில் அறிவிப்போம். மாகடி கோட்டை 103 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். பிடதியில் டவுன்ஷிப் கட்டப்படும். நிலத்திற்காக விவசாயிகளுடன் பேசுவோம்.

தற்போது 'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பு தலைவராக உள்ளேன். விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். கே.எம்.எப்., தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us