தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கெம்பே கவுடா சிறந்த நகர திட்டமிடுபவர்' துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்

 'கெம்பே கவுடா சிறந்த நகர திட்டமிடுபவர்' துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்

 'கெம்பே கவுடா சிறந்த நகர திட்டமிடுபவர்' துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்


ADDED : ஜூன் 28, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கெம்பே கவுடா ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் ஆட்சியாளர் அல்ல; அவர் உலகளாவிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு சிறந்த நகர திட்டமிடுபவர்,'' என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடபிரபு கெம்பே கவுடா பவுண்டேஷன் சார்பில், பெங்களூரு நகர பல்கலைக்கழகத்தின் ஞானஜோதி அரங்கில் நடந்த கெம்பே கவுடா 517வது பிறந்த நாளை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

கெம்பே கவுடா ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் ஆட்சியாளர் அல்ல; அவர் உலகளாவிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு சிறந்த நகர திட்டமிடுபவர். அவர் வெறும் சாலைகள், சந்தைகளை மட்டும் கட்டவில்லை.

நுாற்றுக்கணக்கான ஏரிகளையும், கிணறுகளையும் தோண்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்புக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை ஆற்றி உள்ளார். அவரது நீர் மேலாண்மை தொழில்நுட்பம், இன்றைய நவீன நகர்ப்புற திட்டங்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.

அதில் இருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம். கெம்பே கவுடாவின் பெயரில் இந்த விருது பெறுவது பெருமைக்குரிய விஷயம். சமூகத்தின் முன்னேற்றத்துக்காக இன்னும் கடினமாக உழைக்க, இந்த கவுரம் உங்களை ஊக்குவிக்கட்டும்.

இன்றைய இளைஞர்கள், கெம்பே கவுடாவின் தைரியம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். அவரது லட்சியங்களின் பாதையை பின்பற்றி, வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை கட்டி எழுப்ப நாம் கைக்கோர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us