தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தயாரிப்பாளர் ஹரிஷின் மகன் உல்லாஸ் கவுடா மாரடைப்பால் உயிரிழப்பு

 தயாரிப்பாளர் ஹரிஷின் மகன் உல்லாஸ் கவுடா மாரடைப்பால் உயிரிழப்பு

 தயாரிப்பாளர் ஹரிஷின் மகன் உல்லாஸ் கவுடா மாரடைப்பால் உயிரிழப்பு


ADDED : ஜூன் 28, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தயாரிப்பாளர் ஹரிஷ், கர்நாடக தி ரைப்பட வர்த்தக சபையில் தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் உல்லாஸ் கவுடா, 28. இவரும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். ' உல்லாஸ் கிளாஸ் ஆப் சினிமாஸ்' என்ற பெயரில், நிறுவனம் திறந்து, திரைப்படம் தொடர்பான பயிற்சி அளித்து வந்தார்.

இவருக்கு பெண் பார்த்து, திருமணம் முடிவாகியுள்ளது. வரும் ஆகஸ்டில் நிச்சயதார்த்தமும், டிசம்பரில் திருமணமும் நடக்கவிருந்தன. இவர் ஷிவமொக்காவின், கொடசாத்ரிக்கு, மலையேற்றம் சென்றிருந்தார். இவருக்கு நேற்று காலை இருதய வலி ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் உல்லாஸ் கவுடா உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us