ADDED : ஜூன் 27, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயலில் கெம்பே கவுடா ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தங்கவயல் தாலுகா அலுவலகம் சார்பில் நடந்த விழாவில், கெம்பே கவுடா படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரி ல், அவரின் படத்தை, நகர்வலம் எடுத்து வந்தனர். ஒக்கலிகர் சமுதாய பிரமுகர்களுக்கு பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தனர்.
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தாசில்தார் பாரத், நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் மற்றும் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
