ADDED : ஜூன் 27, 2026 11:13 PM
ஆன்மிகம் சொற்பொழிவு சுவாமி சர்வஜெயானந்தாஜியின் கன்னடத்தில் 'ஸ்ரீஸ்ரீ ராமகிருஷ்ண சரித்திரம்' சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.
ஆயுர்வேத முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகு வலிக்கான சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 98864 85005.
இசை நிகழ்ச்சி ராகா வைபவ நல அறக்கட்டளை சார்பில் ஹிந்துஸ்தானி பாடகி சங்கீதா கட்டி குல்கர்னியின் பாடல், ராஜேந்திர நாகோடின் தபலா, சதிஷ் கோலியின் ஹார்மோனியம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ நாடபிரம்மா சங்கீத சபை, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
நாடகம் கிரிஷ் கர்நாடின் எழுத்தில், சாலியனா உமேசின் 'அக்னி மத்து மலே' நாடகம் - மாலை 6:30 மணி. இடம்: ரங்காயனா வளாகம், மைசூரு.
