ADDED : பிப் 07, 2026 06:30 AM

கேரள பாணி இடி சம்மந்தி சட்னி பொடி, சாதத்துக்கும், தோசைக்கும் அருமையாக இருக்கும். இன்று அல்லது நாளை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் (4 பேருக்கு)
தேங்காய் பூ துருவல் - ஒரு கப், * வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு, * புளி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல், * கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன், * வரகொத்தமல்லி - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன், * மிளகு - கால் ஸ்பூன்
பெருங்காயம் துாள் - 1 ஸ்பூன், * கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வாணலியில் தேங்காய் பூ துருவலை நன்கு வதக்கவும். பின், அத்துடன் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகு, பெருங்காயம் துாள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும். இதனை காயவைத்த பின், மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்
மணக்கும் சுவையான சம்மந்தி சட்னி பொடி தயார். இதனை சாதத்திற்கும், தோசைக்கும் வைத்து சாப்பிடலாம்.
- நமது நிருபர் -:

