/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கேரளா ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் பலாக்காய் ஸ்பைசி வறுவல்
/
கேரளா ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் பலாக்காய் ஸ்பைசி வறுவல்
கேரளா ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் பலாக்காய் ஸ்பைசி வறுவல்
கேரளா ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் பலாக்காய் ஸ்பைசி வறுவல்
ADDED : பிப் 21, 2026 04:18 AM

- நமது நிருபர் -
: பலாக்காய் உடல் சூட்டை குறைக்க கூடியது. பித்த மயக்கம், பித்த வாந்தியை குணமாக்கும். வைட்டமின் 'ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இரும்பு சத்தும், கால்ஷியமும் உள்ளது.
தேவையான பொருட்கள்
பலாக்காய் - 1 சிறியது, காஷ்மீரி மிளகாய் துாள் - 1 ஸ்பூன், மஞ்சள் துாள் - ஒரு டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் கலந்தது - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை
கைகள், கத்தி போன்றவற்றில், நன்றாக எண்ணெய் தடவிக்கொண்டு, பலாக்காயின் தோலை நீக்க வேண்டும். உள்ளே இருக்கும் சுளையை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போடவும் .
அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய பலாக்காய் சுளையை போட்டு உப்பு, தண்ணீரை லேசாக தெளிக்கவும்.
பலாக்காய் சுளை இரண்டு பக்கமும் சிவக்க வறுக்க வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு, வறுத்த பலாக்காயை, தனி பாத்திரத்தில் போட்டு, மேலே மஞ்சள் துாள் துாவவும். பின் நன்றாக குலுக்கவும். மீண்டும் மஞ்சள் துாள் போடவும். மீண்டும் நன்றாக குலுக்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் எண்ணெய் சிறிது விட்டு, காய்ந்ததும், கறிவேப்பிலையை பொரித்து போடவும்.
அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலக்கினால் கேரளா ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் தயார்.

