/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கும்பல் தாக்குதலில் கேரள வாலிபர் பலி இன்ஸ்பெக்டர், 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
/
கும்பல் தாக்குதலில் கேரள வாலிபர் பலி இன்ஸ்பெக்டர், 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
கும்பல் தாக்குதலில் கேரள வாலிபர் பலி இன்ஸ்பெக்டர், 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
கும்பல் தாக்குதலில் கேரள வாலிபர் பலி இன்ஸ்பெக்டர், 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 02, 2025 05:42 AM
மங்களூரு: கும்பல் தாக்குதலில் கேரள வாலிபர் பலியான வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
மங்களூரின் குடுபு பகுதியில் கடந்த 27ம் தேதி, கொலையான நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், வாலிபரை 30 பேர் கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியதில் இறந்தது தெரிந்தது.
இந்த வழக்கில் குடுபு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சச்சின், 26, தேவதாஸ், 50,மஞ்சுநாத், 32, சாய்தீப், 29,நிதிஷ்குமார், 33, தீக் ஷித் குமார், 32, சந்தீப், 23, விவியன் அல்வரஸ், 41.
ஸ்ரீதத்தா, 32, பிரதீப் குமார், 35, மனீஷ் ஷெட்டி, 21, தனுஷ், 31, தீக் ஷித், 27, கிஷோர் குமார், 37, ராகுல், 23 உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்த வாலிபர் யார் என்று முதலில் தெரியவில்லை. போலீசாரின் விசாரணையில், கேரளாவின் வயநாடு மானந்தவாடி அருகே புல்பள்ளியை சேர்ந்த முகமது அஸ்ரப், 28 என்பதுதெரிந்தது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால், முகமது அஸ்ரப் அடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த கோணத்தில் விசாரணை நடப்பதாக, உள்துறை அமைச்சர்பரமேஸ்வரும் கூறிஇருந்தார்.
இந்நிலையில், மத கலவரத்தை ஏற்படுத்தும்நோக்கில், முகமது அஸ்ரப்கொலை செய்யப்பட்டதாக, ஒரு சமூகத்தினர்குற்றச்சாட்டு கூறினர்.
இதுபற்றி உரியவிசாரணை நடத்தும்படி,கர்நாடக சுகாதார துறை அமைச்சரும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து உரிய விசாரணை கேட்டு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு, தினேஷ்குண்டுராவும் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் கொலை என்று தெரிந்தும், மர்ம சாவு வழக்குப்பதிவு செய்தது பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, மங்களூரு ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு சந்திரா, போலீஸ்காரர் யல்லலிங்கா ஆகியோரைசஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர்அனுபம் அகர்வால் நேற்றுஉத்தரவிட்டார்.