/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவி நழுவ கார்கே காரணம்
/
அமைச்சர் பதவி நழுவ கார்கே காரணம்
ADDED : மே 16, 2025 05:23 AM
கோலார்: கோலாரின், முல்பாகலில் காங்., - எம்.எல்.சி., அனில்குமார் நேற்று அளித்த பேட்டி:
கொத்துார் மஞ்சுநாத், கோலார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். இவர் அமைச்சர் பதவியில் இருந்திருக்க வேண்டும். இவருக்கு பதவி கை நழுவ, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காரணம்.
கடந்2023ன் சட்டசபை தேர்தலில் முல்பாகல் தொகுதியில், முத்து கங்காதருக்கு சீட் கிடைக்காததால், கொத்துார் மஞ்சுநாத் அமைச்சராக முடியவில்லை.
முத்து கங்காதர், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நெருக்கமானவர். இவர் 2023ன் சட்டசபை தேர்தலில், முல்பாகல் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் கொத்துார் மஞ்சுநாத், இறுதி விநாடியில் பிடிவாதம் பிடித்து, ஆதி நாராயணாவுக்கு சீட் கிடைக்க செய்தார். ஆனால் இவர் தோற்றுவிட்டார். இவர் தோற்றதால் கொத்துார் மஞ்சுநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.