/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அமைச்சர்கள் மீது கார்கே அதிருப்தி
/
காங்., அமைச்சர்கள் மீது கார்கே அதிருப்தி
ADDED : அக் 18, 2025 11:14 PM
பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக குரல் கொடுக்கும், கிராம மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்,'' என, காங்.,தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தி தெரிவித்தார்.
துணை முதலவர் சிவகுமாரை, நேற்று முன் தினம் நள்ளிரவு, மல்லிகார்ஜுன கார்கே சந்தித்துப் பேசினார். அப்போது சிவகுமாரிடம் ஆர்.எஸ்.எஸ்., விவகாரம் குறித்து தன் வருத்தத்தை அவர் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான போராட்டத்தில், காங்கிரசில் ஒற்றுமை தென்படவில்லை. அமைச்சர் பிரியங்க் கார்கேவின் கடிதம் அடிப்படையில், மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு பக்கபலமாக, யாரும் நிற்கவில்லை என்று சிவகுமாரிடம் கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விவகாரத்தில், எந்த அமைச்சரும் வாய் திறக்கவில்லை. அரசும் மவுனமாகவே உள்ளது. அமைச்சருக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை எந்த ஒரு அமைச்சரும் நேரடியாக கண்டிக்கவில்லை. மதில் மேல் பூனை போன்று பேசுகின்றனர். அமைச்சர் பிரியங்க் கார்கே தனிமையில் விடப்பட்டுள்ளார் என, அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

