/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடத்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் மீட்பு: ஏட்டு உட்பட 8 பேர் கைது
/
கடத்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் மீட்பு: ஏட்டு உட்பட 8 பேர் கைது
கடத்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் மீட்பு: ஏட்டு உட்பட 8 பேர் கைது
கடத்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் மீட்பு: ஏட்டு உட்பட 8 பேர் கைது
ADDED : நவ 24, 2025 03:36 AM
கோரமங்களா: பெங்களூரில் கடத்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்கள் நான்கு பேர் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். ஏட்டு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கோரமங்களாவில், 'குளோபல் கனெக்ட் டெலிகாம் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், கால் சென்டர் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு, கால் சென்டருக்கு எட்டு பேர் சென்றனர்.
நிறுவனத்தின் பொறுப்பாளர்களான பவன், ராஜ்வீர், ஆகாஷ், அனஸ் ஆகியோரிடம், 'நாங்கள் போலீஸ், இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்து உள்ளது. உங்களிடம் விசாரிக்க வேண்டும்' என்று கூறினர்.
இதை நம்பிய கால் சென்டர் பொறுப்பாளர்கள், நான்கு பேரும் அலுவலகத்தில் இருந்து கீழே வந்தனர். திடீரென அவர்களை பிடித்து காரில் தள்ளிய, எட்டு பேரும் அங்கிருந்து காரை எடுத்து கொண்டு புறப்பட்டனர்.
பின், நிறுவனத்தின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு, 'நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் 25 லட்சம் ரூபாய் தர வேண்டும்; இல்லாவிட்டால் கொன்று விடுவோம்' என்று மிரட்டினர்.
பயந்து போன மேலாளர் 8.90 லட்சம் ரூபாயை முதற்கட்டமாக அனுப்பினார். மீதி பணத்தை கேட்டு, கும்பல் நெருக்கடி கொடுத்தனர்.
வேறு வழியின்றி கோரமங்களா போலீசில் புகார் செய்தார். தென்கிழக்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமா உத்தரவின்படி, கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
நிறுவனத்தின் மேலாளர் மொபைலுக்கு வந்த அழைப்பு மூலம் விசாரித்த போது, அழைப்பு வந்த மொபைல் நம்பர் ஹொஸ்கோட்டில் உள்ள லாட்ஜில் இருப்பது தெரிந்தது.
அங்கு காலை 11:00 மணிக்கு சென்ற போலீசார், கால் சென்டர் ஊழியர்கள் நான்கு பேரையும் மீட்டனர். இவர்களை கடத்தி சென்ற சலபதி, பரத், பவன், பிரசன்னா, அதீக், ஜபியுல்லா உட்பட 8 பேரை கைது செய்தனர்.
இவர்களில் சலபதி, கோலார் மாவட்டம் மாலுார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்கிறார்.

