/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குட்டீஸ்களுக்கு பிடித்த ஆலு சாண்ட்விச்
/
குட்டீஸ்களுக்கு பிடித்த ஆலு சாண்ட்விச்
ADDED : ஆக 22, 2025 11:20 PM

வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு விதவிதமான சிற்றுண்டிகளை செய்து கொடுப்பது, அம்மாக்களுக்கு பெரும் தலைவலிதான். ஒரு முறை செய்த சிற்றுண்டியை, மற்றொரு முறை செய்து கொடுத்தால், குட்டீஸ்கள் முகத்தை சுளிப்பர். இன்றைக்கு சாண்ட்விச் செய்து தரலாம் என, யோசிக்கிறீர்களா? பிரட் இல்லையா? கவலை வேண்டாம். பிரட் இல்லாமலும், ஆலு சாண்ட்விச் செய்யலாம்.
செய்முறை முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உறித்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசிக்கவும்.
மற்றொரு கிண்ணத்தில், கடலை மாவு, சோம்பு, மஞ்சள் துாள், தேவையான உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு தயார் செய்து வைக்கவும். அதன்பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன், சீரக துாள், மஞ்சள் துாள், மிளகாய் துாள், இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பக்கோடா மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் தடவுங்கள். சூடானதும் ஏற்கனவே தயார் செய்துள்ள கடலைமாவை, தடிமனாக ஊற்றவும். மிதமான தீயில் வெந்த பின், திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் நன்றாக வேக வேண்டும்.
அதன்பின் இதை இரண்டாக வெட்டவும். ஒரு பாதியில் உருளைக்கிழங்கு கலவையை சிறிதளவு வைத்து, ஸ்டப் செய்து மடித்து கொள்ளவும். அதே போன்று இன்னொரு பாதியிலும், உருளைக்கிழங்கு கலவை வைத்து மடித்துக் கொள்ளவும். இவற்றை இரண்டு பக்கமும், திருப்பிப் போட்டு சில நிமிடங்கள் வேக வைத்தால், சூடான, சுவையான ஆலு சாண்ட்விச் தயார்.
தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும். குட்டீஸ்களும் விரும்பி சாப்பிடுவர். அடிக்கடி இதை செய்து தரும்படி நச்சரிப்பர்
- நமது நிருபர் - .