ADDED : ஜன 03, 2026 07:01 AM

- நமது நிருபர் -:
மாலை வேளையில் பள்ளி முடித்து வரும் குழந்தைகள் களைப்பாக வீட்டுக்கு வருவர். இவர்களின் களைப்பை போக்குவதற்கு விதவிதமாக, 'ஸ்நாக்ஸ்' செய்து அசத்தலாம். இந்த லிஸ்ட்டில், 'பிரெட் ரவை வடை' செய்து அசத்தலாம். இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l பரெட் ஸ்லைஸ் - 10
l தயிர் - 4 டீஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l ரவை - 50 கிராம்
l அரிசி மாவு - 100 கிராம்
l கொத்தமல்லி - சிறிதளவு
l பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
l இஞ்சி - 1 டீஸ்பூன்
l பச்சை மிளகாய் - 2
l பெரிய வெங்காயம் - 1
l கறிவேப்பிலை ஒரு கொத்து
l எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரெட்டின் ஓரத்தை கத்தியால், 'கட்' செய்து அகற்றி விட வேண்டும். பின், பிரெட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் தயிர், உப்பு, ரவை, அரிசி மாவு, கொத்தமல்லி, சோடா உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.இந்த கலவை வடை போடுவதற்கு ஏற்ற பக் குவத்தில் இருக்க வேண்டும்.
பின், ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த கலவையை சிறிதளவு எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பிரெட் வடை தயார். இதை தக்காளி சாஸுடன் தொட்டு சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்.

