/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் பா.ஜ.,வினர் 11ல் தர்ணா போராட்டம்
/
கோலார் பா.ஜ.,வினர் 11ல் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 08, 2025 04:07 AM
கோலார்: எஸ்.சி., - எஸ்.டி., நலனுக்கான அம்பேத்கர் நல வாரியம், வால்மீகி நல வாரியம், ஆதி ஜங்கம்மா நல வாரியத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதை கண்டித்து, வரும் 11ம் தேதி கோலார் பா.ஜ.,வினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக கோலாரில், பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி அளித்த பேட்டி:
கர்நாடக மாநில அரசு எஸ்.சி., - எஸ்.டி., நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற்று, அந்த தொகையை வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு பெரிய துரோகம் செய்கின்றனர்.
தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகள் ஒருங்கிணைந்த 'அஹிந்தா' தலைவர் என, தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட முதல்வர் சித்தராமையா, தலித்துகளின் நிதியை மோசடி செய்யலாமா?
மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இதுகுறித்து கோலார் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட தலைவர் ஓம் சக்தி சலபதி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.
எஸ்.சி., - எஸ்.டி., நலனுக்கான அம்பேத்கர் நல வாரியம், வால்மீகி நல வாரியம், ஆதி ஜங்கம்மா நல வாரியம் ஆகியவற்றுக்கு அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதை கண்டித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு தர்ணா நடத்தப்படும். பா.ஜ.,வின் அனைத்து பிரிவினரும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம் சக்தி சலபதி, முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி உட்பட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.