/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாகிஸ்தானுக்கு தக்காளி அனுப்ப மாட்டோம் கோலார் விவசாயிகள், வர்த்தகர்கள் அறிவிப்பு
/
பாகிஸ்தானுக்கு தக்காளி அனுப்ப மாட்டோம் கோலார் விவசாயிகள், வர்த்தகர்கள் அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு தக்காளி அனுப்ப மாட்டோம் கோலார் விவசாயிகள், வர்த்தகர்கள் அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு தக்காளி அனுப்ப மாட்டோம் கோலார் விவசாயிகள், வர்த்தகர்கள் அறிவிப்பு
ADDED : மே 02, 2025 05:33 AM

கோலார்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி உட்பட எந்த காய்கறிகளையும் ஏற்றுமதி செய்வதில்லை என்று கோலார் மாவட்ட விவசாயிகள், வர்த்தகர்கள் அறிவித்து உள்ளனர்.
ஆசியா கண்டத்திலேயே பெரிய தக்காளி சந்தை என்ற பெருமையை கோலார் ஏ.பி.எம்.சி., பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் விளையும் தரமான தக்காளி, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது .
ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி அறுவடை மாதங்கள். இந்த சந்தர்ப்பத்தில் இங்குள்ள விவசாயிகள் கோலாரில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வது வழக்கம்.
சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் ஓயவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக நமது நாடு பல அதிரடியை மேற்கொண்டு உள்ளது.
இந்த வரிசையில், கோலாரில் உள்ள விவசாயிகள், பாகிஸ்தானுக்கு தக்காளியை அனுப்புவதை நிறுத்த முடிவு செய்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோலாரில் இருந்து பாகிஸ்தானுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் கிலோ வரை தக்காளி அனுப்புவது வழக்கம். பஹல்காம் தாக்குதலால் அதிருப்தியில் உள்ள வர்த்தகர்கள், தக்காளியை அனுப்புவதில்லை என முடிவு செய்து உள்ளனர். இது மட்டுமின்றி தக்காளியுடன் சேர்த்து அனுப்பும் காய்கறிகளையும் நிறுத்தி விட்டனர்.
வியாபாரிகள், வர்த்தகர்கள் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு தக்காளி அனுப்ப மாட்டோம். எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. 2013 ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின் போதும் பாகிஸ்தானுக்கு எதிராக, கோலார் விவசாயிகளும் இது போன்ற முடிவை எடுத்தனர். மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்' என்றனர்.
உடுப்பியில் சோதனை
உடுப்பியில் மாவட்ட கலெக்டர் வித்யாகுமாரி உத்தரவுபடி, கடலோர காவல் படையினர், ஆயுதங்கள் ஏந்தி, கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் படகில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், படகுகளை சோதனை நடத்துகின்றனர். கடற்கரையிலும் ரோந்து சுற்றி, சந்தேகத்திற்கிடமான நபர்களை பாதுகாப்பு படையினர் கண்காணிக்கின்றனர்.

