ADDED : ஜூலை 10, 2025 11:11 PM

மாநிலத்தில் நவம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்று முதல்வர் பதவியை எதிர்பார்ப்பவர்கள், அப்பதவியை அடைய நினைப்பது தவறில்லை. ஆனால் கட்சி தலைமையும், எங்கள் எம்.எல்.ஏ.,க்களும், சித்தராமையாவை ஐந்து ஆண்டுகள் முதல்வராக தொடர முடிவு செய்துள்ளனர். இதையே தான் காங்கிரஸ் பொது செயலரும் கூறி உள்ளார்.
'காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு கவிழ்ந்துவிடும்; முதல்வர் மாற்றப்படுவார்' என, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். அப்படி எதுவும் நடந்ததா; இல்லையே. மைசூரு மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் வரும் 19ம் தேதி, மக்கள் நல திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக காங்கிரஸ் சாதனை மாநாடு நடக்கிறது.
இது தொடர்பாக, மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தலைமையில் நாளை மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.சி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- யதீந்திரா,
எம்.எல்.சி., - காங்கிரஸ்