தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.பி.எஸ்.சி., ஊழல் வழக்கை விசாரிக்கும் இரண்டு உயர் அதிகாரிகளை மாற்ற அனுமதி

கே.பி.எஸ்.சி., ஊழல் வழக்கை விசாரிக்கும் இரண்டு உயர் அதிகாரிகளை மாற்ற அனுமதி

கே.பி.எஸ்.சி., ஊழல் வழக்கை விசாரிக்கும் இரண்டு உயர் அதிகாரிகளை மாற்ற அனுமதி


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கால்நடை தேர்வு முறைகேடு வழக்கை விசாரிக்கும், எஸ்.ஐ.டி., அமைப்பின் உயர் அதிகாரிகள் இருவரை மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

கர்நாடக அரசின் கால்நடை துறையில், 400 மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோர்ட் அறிவிப்பு



விசாரணை குழுவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார், டி.ஐ.ஜி., திவ்யா கோபிநாத் தலைமை தாங்குவர் என நீதிமன்றம் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளான அலோக்குமார், திவ்யா கோபிநாத்தை மாற்றம் செய்ய வேண்டுமென, மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் மனோஜ் மிஷ்ரா, விஜய் பிஷ்னோய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வக்கீல்: எஸ்.ஐ.டி., தலைவராக நியமிக்கப்பட்ட அலோக் குமார் மீது மொபைல் போன் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டு இருந்தது.

டி.ஐ.ஜி., திவ்யா கோபிநாத் மாநில தடயவியல் ஆய்வகத்தின் தலைவராக இருக்கிறார். இது விசாரணையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இந்த இரண்டு அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்.

எஸ்.ஐ.டி., அமைக்க மனுதாக்கல் செய்தவர்கள் தரப்பு வக்கீல்: அலோக் குமார் மொபைல் போன் ஒட்டு கேட்பு வழக்கிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டார்.

மாநில அரசு, தனக்கு சாதகமான அதிகாரிகளை நியமிக்க முயல்கிறது. மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.

நீதிபதிகள்: இவ்வழக்கில் உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால், டி.ஜி.பி.,க்கு பதிலாக ஏ.டி.ஜி.பி., அல்லது கீழ்நிலை அதிகாரிகளை நியமிப்பது சரியல்ல. எனவே, விசாரணை அதிகாரி என்பவர் மூத்த அதிகாரியாக இருக்க வேண்டும்.

மாநில அரசு விருப்பம் தெரிவித்த இரண்டு அதிகாரிகளுக்கு பதிலாக மூத்த அதிகாரிகளை டி.ஜி.பி., சலீம் நியமிக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்குள் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும்.

புதிய அதிகாரிகள் நியமிக்கப்படும் வரை, சி.ஐ.டி., எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யக்கூடாது. இவ்வழக்கில் மறுவிசாரணை அல்லது புதுவிசாரணை நடத்த முடியாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us