தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு தசராவுக்கு 2,300 சிறப்பு பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவிப்பு

மைசூரு தசராவுக்கு 2,300 சிறப்பு பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவிப்பு

மைசூரு தசராவுக்கு 2,300 சிறப்பு பஸ்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவிப்பு


ADDED : செப் 22, 2025 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு : 'மைசூரு தசராவுக்காக வரும் 26, 27, 30ம் தேதிகளிலும்; அக்., 2, 3, 4, 5ம் தேதிகளிலும் கூடுதலாக 2,300 பஸ்கள் இயக்கப்படும்' என கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

தசரா திருவிழாவை ஒட்டி, உள் மாநிலம், வெளி மாநிலங்களுக்கு கூடுதலாக 2,300 பஸ்களை இயக்கப்படும். இந்த பஸ் போக்குவரத்து 26, 27, 30ம் தேதிகளிலும்; அக்., 2, 3, 4, 5ம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளன.

எங்கெங்கு? பெங்களூரு கெம்பே கவுடா பஸ் நிலையம், மைசூரு ரோடு பஸ் நிலையம், சாந்தி நகர் பஸ் நிலையங்களில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, ஷிவமொக்கா, மடிகேரி, மங்களூரு, தாவணகெரே, கோகர்ணா, கொல்லுார், ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி.

விஜயபுரா, கார்வார், பல்லாரி, ஹொஸ்பேட், கலபுரகி, ராய்ச்சூர் உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும்; ஹைதராபாத் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, ஷிருடி, புனே, எர்ணாகுளம், பாலகாடு உட்பட மற்ற மாநிலங்களுக்கும் இயக்கப்படும்.

பெங்களூரு மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூருக்கு 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோன்று மைசூரில் இருந்து சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் கார்டன், ஸ்ரீரங்கபட்டணா, நஞ்சன்கூடு, மடிகேரி, மாண்டியா, மலவள்ளி, எச்.டி.கோட்டே, சாம்ராஜ் நகர், ஹூன்சூர், கே.ஆர்., நகர், குண்லுடுபேட் உட்பட பல ஆன்மிகம், சுற்றுலா தளங்களுக்கு 350 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'ஏசி' வசதி கொண்ட 'பிளை பஸ்'கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா பேக்கேஜ் கிரிதர்ஷினி: பண்டிப்பூர், கோபாலசுவாமி மலை, பி.ஆர்., மலை, நஞ்சன்கூடு, சாமுண்டி மலைக்கு பெரியவர்ளுக்கு 450 ரூபாய்; சிறியவர்களுக்கு 350 ரூபாய் கட்டணம்.

ஜலதர்ஷினி: பைலகுப்பே கோல்டன் டெம்பிள், துபாரே வனப்பகுதி, நிசர்கதாமா, ராஜாசீட், ஹாரங்கி அணை, கே.ஆர்.எஸ்., அணைக்கு பெரியவர்களுக்கு 500 ரூபாய், சிறியவர்களுக்கு 350 ரூபாய் கட்டணம்.

தேவதர்ஷினி: நஞ்சன்கூடு, முடுகுத்தோர், தலகாடு, சோமநாதபுரம், ஸ்ரீரங்கபட்டணாவுக்கு பெரியவர்களுக்கு 350 ரூபாய், சிறியவர்களுக்கு 225 ரூபாய் கட்டணமாகும். இந்த பேக்கேஜ், வரும் 27ம் தேதி முதல் அக்., 7 ம் தேதி வரை இருக்கும். இந்த பேக்கேஜ் பஸ்கள், மைசூரில் இருந்து தினமும் காலை புறப்பட்டு, மாலை மீண்டும் மைசூரு வந்தடையும்.

டிக்கெட்களை www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு மைசூரு சிட்டி பஸ் நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கர்நாட கா, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கோவா, மஹாராஷ்டிரா ஆகிய பஸ் நிலையங்களில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., கவுன்டரிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us