தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிராமங்களுக்கும் மின்சார பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்

 கிராமங்களுக்கும் மின்சார பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்

 கிராமங்களுக்கும் மின்சார பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்


ADDED : மார் 09, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: எரி பொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும், மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதி செய்யும் நோக்கில், கிராமங்களிலும் மின்சார பஸ்கள் இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகாவில் 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஸ்களின் தேவை அதிகமாகிறது. இதன் விளைவாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, மின்சார பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக மத்திய அரசின், 'பிம் இ - பஸ்' திட்டம் போன்று, மாநில அரசும் கர்நாடக எலக்ட்ரிகல் பஸ் புரோக்ராம் திட்டம் வகுத்துள்ளது.

இத்திட்டத்தை மாநிலம் முழுதும் செயல்படுத்த அரசு ஆலோசிக்கிறது. இதுவரை நகரங்களில் மட்டுமே மின்சார பஸ்கள் இயக்கப்பட்டன. வரும் நாட்களில் கிராமங்களிலும், மின்சார பஸ்கள் இயக்க தயாராகிறோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிராமப்புறங்களில் மின்சார பஸ்கள் இயக்கிய முதல் மாநிலம் என்ற பெருமை, கர்நாடகாவுக்கு கிடைக்கும்.

முதற்கட்டமாக கிராமங்களுக்கு, 1,950 மின்சார பஸ்கள் இயக்கப்படும். மின்சார பஸ்கள் நிறுத்த மாவட்டம் அல்லது தாலுகா அளவில், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் கட்டப்படும். இங்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் உட்பட, அனைத்து வசதியும் செய்யப்படும். மக்களின் வரவேற்பை கவனித்து, மின்சார பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், அனைத்து இடங்களிலும் பஸ்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேவையான அளவில் போக்குவரத்து துறையால், பஸ்களை வழங்க முடியவில்லை. மின்சார பஸ் திட்டத்துக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இட வசதி செய்தால், ஊருக்கு ஒன்று வீதம் மின்சார பஸ்களை இயக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us