தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குளிர்காலம் துவங்குவதால் எச்சரிக்கை ஓட்டுநர்களுக்கு கே.எஸ்.ஆர்.டிசி., ‘அட்வைஸ்’

குளிர்காலம் துவங்குவதால் எச்சரிக்கை ஓட்டுநர்களுக்கு கே.எஸ்.ஆர்.டிசி., ‘அட்வைஸ்’

குளிர்காலம் துவங்குவதால் எச்சரிக்கை ஓட்டுநர்களுக்கு கே.எஸ்.ஆர்.டிசி., ‘அட்வைஸ்’


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘குளிர்காலம் துவங்கவுள்ளதால், பனிமூட்டமான சூழ்நிலை இருக்கும். சாலைகள் சரியாக தெரியாது. எனவே மிகுந்த கவனத்துடன் பஸ் ஓட்ட வேண்டும். விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என ஓட்டுநர்களுக்கு கே.எஸ்.ஆர்.டிசி., உத்தரவிட்டுள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

குளிர்காலம் துவங்கவுள்ளதால், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயணியர், பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஓட்டுநர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொறுமையுடன் பஸ் ஓட்டுவது அவசியம்.

பனி மூட்டமாக இருக்கும் போதோ அல்லது சாலை சரியாக தெரியாத போதோ, முன்னே செல்லும் வாகனங்களை முந்தி செல்ல முயற்சிக்க கூடாது. திடீர் ‘பிரேக்’ போட கூடாது. வாகனங்களுக்கு நடுவே போதுமான அளவு, இடைவெளி இருப்பது அவசியம். அவசர நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போது, அதிக கவனம் தேவை.

அபாயமான முறையில் வழித்தடத்தை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை பயணத்துக்கு முன், பஸ்சின் ஹெட் லைட், இன்டிகேட்டர், பிரேக்லைட், வைபர்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை, ஆய்வு செய்வது அவசியம்.

பனி மூட்டம் இருக்கும் போது, பஸ்சின் வேகத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். திடீரென வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது, பிரேக் போடுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

நீண்ட துாரம் பயணத்தின் போது, நடுவே ஓய்வு பெற வேண்டும். உடல் சோர்வாக இருந்தாலோ, துாக்க கலக்கத்திலோ பஸ் ஓட்ட கூடாது.

அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் அருகில் செல்லும் போது, உஷாராக இருக்க வேண்டும். மழை, பனி மூட்டத்தில், சறுக்கலான சாலைகளில் பயணிக்கும் போது, கூடுதல் முன்னெச்சரிக்கை கட்டாயம்.

பயணியர் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் பஸ்சை நிறுத்தி வைக்க வேண்டும். அவசரமாக பஸ்சை எடுக்க கூடாது. பஸ் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்த கூடாது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

பஸ்சை எடுக்கும் போதே, பஸ்சை முற்றிலுமாக பரிசோதிக்க வேண்டும். ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சரி செய்த பின்னரே, பஸ்சை கிளப்ப வேண்டும்.

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, தேவையற்ற இடங்களில் பஸ்சை நிறுத்த கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us