/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குக்கே சுப்ரமண்யர் கோவில் வருவாய் ஒரே ஆண்டில் ரூ.156 கோடி வசூல்
/
குக்கே சுப்ரமண்யர் கோவில் வருவாய் ஒரே ஆண்டில் ரூ.156 கோடி வசூல்
குக்கே சுப்ரமண்யர் கோவில் வருவாய் ஒரே ஆண்டில் ரூ.156 கோடி வசூல்
குக்கே சுப்ரமண்யர் கோவில் வருவாய் ஒரே ஆண்டில் ரூ.156 கோடி வசூல்
ADDED : ஏப் 18, 2025 07:06 AM

மங்களூரு: கர்நாடகாவின் வரலாற்று பிரசித்தி பெற்ற, குக்கே சுப்ரமண்யர் கோவிலின் வருவாய் ஒரே ஆண்டில், கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
தட்சிண கன்னட மாவட்டம், சுள்ளியா தாலுகாவில் குக்கே சுப்ரமண்யர் கோவில் உள்ளது. இது பிரசித்தி பெற்ற பரிகார தலம். ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து பரிகார நிவர்த்தி செய்து கொள்வர்.
வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், கோவிலின் வருவாய் ஆண்டுதோறும் ஏறுமுகமாகிறது.
கர்நாடகாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில், இக்கோவில் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த 2023 - 24ம் ஆண்டு, 146.01 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2024 - 25ம் ஆண்டு இந்த வருவாய் 155.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலவச பஸ் பயணத்தை பயன்படுத்தி பெருமளவில் பெண்கள் வருவதும், கோவிலின் வருவாய் அதிகரிக்க காரணம்.