/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'2 முறை 'லீஸ்' அடிப்படையில் முதல்வரானவர் குமாரசாமி'
/
'2 முறை 'லீஸ்' அடிப்படையில் முதல்வரானவர் குமாரசாமி'
'2 முறை 'லீஸ்' அடிப்படையில் முதல்வரானவர் குமாரசாமி'
'2 முறை 'லீஸ்' அடிப்படையில் முதல்வரானவர் குமாரசாமி'
ADDED : ஜன 14, 2026 03:38 AM

''குமாரசாமி இரண்டு முறை குத்தகை அடிப்படையில், முதல்வராக இருந்தவர்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா விமர்சித்தார்.
முதல்வர் சித்தராமையா, 'குத்தகை அடிப்படையிலான முதல்வர்' என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சரும். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான குமாரசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து, பெங்களூரில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா அளித்த பேட்டி:
சித்தராமையா குத்தகை அடிப்படையிலான முதல்வர் என்றால், குமாரசாமி யார். அவர், மாநிலத்தில் இரண்டு முறையும் குத்தகை அடிப்படையில் தான் முதல்வராக இருந்தார்.
அவர், 113 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராகவில்லை. 42 இடங்களை பெற்று முதல்வரானவர். சித்தராமையா, 136 இடங்களில் வென்று முதல்வரானவர். இதுபோன்று குமாரசாமி அரசியல் பேசுவது சரியல்ல. அவர், மாநில அரசியலுக்கு நுழைந்தால் வரவேற்பேன்.
என் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரேவண்ணா வருவதை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
முதல்வர் மாற்றம் குறித்து எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில், கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

