தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தந்தையிடம் நலம் விசாரித்தார் குமாரசாமி

தந்தையிடம் நலம் விசாரித்தார் குமாரசாமி

தந்தையிடம் நலம் விசாரித்தார் குமாரசாமி


ADDED : அக் 10, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தன் தந்தை தேவகவுடாவை நலம் விசாரிக்க, மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, டில்லியில் இருந்து பெங்களூரு வந்தார்.

முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா இரண்டு நாட்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். பெங்களூரின் மணிப்பால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காய்ச்சல், சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

தந்தையை காண மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, டில்லியில் இருந்து, நேற்று பெங்களூருக்கு வந்தார். தன் சகோதரர் ரேவண்ணாவுடன், மருத்துவமனைக்கு சென்றார். தன் தந்தையிடம் நலம் விசாரித்தனர்.

பின், குமாரசாமி கூறுகையில், “எங்கள் தந்தைக்கு சிகிச்சை தொடர்கிறது. அவருக்கு இருந்த பிரச்னை நீங்கியுள்ளது. எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். மூன்று, நான்கு நாட்களில் மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆவார்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us