/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சி.பி.சி.,யை மூட குமாரசாமி எதிர்ப்பு
/
சி.பி.சி.,யை மூட குமாரசாமி எதிர்ப்பு
ADDED : டிச 26, 2025 06:45 AM

''மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மைசூரில் உள்ள சி.பி.சி.,யை மூடக்கூடாது,'' என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
மைசூரு, சாம்ராஜ் நகர், குடகு, ஹாசன் மாவட்ட மக்களுக்கு தகவல்கள் வழங்குவதில், சி.பி.சி., எனும் மத்திய தகவல் தொடர்பு பணியகம் முக்கிய பங்காற்றுகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை பரப்புவதில், இப்பணியகம் முக்கிய பங்கும் வகிக்கிறது.
கலாசார நகரமான மைசூரில் அரண்மனைகள், ஜெகன்மோகன் அரண்மனை போன்றவை பாரம்பரிய அடையாளங்களாக உள்ளன. மைசூரில் உலக புகழ்பெற்ற தசரா விழாவும் நடக்கிறது. இம்மாவட்டத்தில், ஜெனு குருபா, காடு குருபா, சோலிகா, யாரவா பழங்குடியினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்க, மைசூரு சி.பி.சி., அலுவலகத்தை பராமரிப்பது அவசியம்; மூடக்கூடாது.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -:

