தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சம்மனுடன் வந்த போலீசார் திருப்பி அனுப்பிய குமாரசாமி

சம்மனுடன் வந்த போலீசார் திருப்பி அனுப்பிய குமாரசாமி

சம்மனுடன் வந்த போலீசார் திருப்பி அனுப்பிய குமாரசாமி


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஹாசன் மாவட்ட கலெக்டர் மீது ஊழல் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் குமாரசாமி எழுப்பினார். கலெக்டரின் தனி உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, குமாரசாமிக்கு போலீசார் அனுப்பிய நோட்டீசை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

கடந்த 8ம் தேதி ஹாசனில் மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், ‘ஹாசன் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் லதாகுமாரியிடம் இருந்து, மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சிவலிங்கே கவுடா, லஞ்சம் பெற்றார்’ என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வேளையில், மாவட்ட கலெக்டர் லதா, தனது உதவியாளர் சசிகிரணுக்கும், இடைத்தரகருக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் வாட்ஸாப் உரையாடலின், ‘ஸ்கிரீன் ஷாட்’களை வெளிப்படுத்தியதாகவும், இந்த உரையாடல் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதை மறுத்த மாவட்ட கலெக்டர் லதா, ‘அந்த வாட்ஸாப் உரையாடல் போலியானது’ என்று கூறி, ஹாசன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் லதாவின் தனி உதவியாளர் சசி கிரண் புகார் அளித்ததன் படி, ஹாசன் சைபர் போலீசார், நேற்று பெங்களூரில் உள்ள குமாரசாமி இல்லத்துக்கு சென்றனர்.

போலீசார் வந்த விஷயத்தை அவரிடம் கூறியபோது, அவர் கோபம் அடைந்தார்.

‘எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், நான் பேச வேண்டியதை பேசி விட்டேன். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்த அனைவர் மீதும் இத்தகைய நடவடிக்கை எடுத்தீர்களா’ என்று போலீசாரிடம் கேட்டார். ; அவர்கள் கொடுத்த நோட்டீசை ஏற்க மறுத்தார்.

பின், மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீமை தொடர்பு கொண்ட குமாரசாமி, இது குறித்து பேசினார். பின், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க குமாரசாமி டில்லி சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us