/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'டிரம்பின் பொருளாதார ஆலோசகராக மாறுங்கள்' முதல்வர் சித்துவை கிண்டல் அடித்த குமாரசாமி
/
'டிரம்பின் பொருளாதார ஆலோசகராக மாறுங்கள்' முதல்வர் சித்துவை கிண்டல் அடித்த குமாரசாமி
'டிரம்பின் பொருளாதார ஆலோசகராக மாறுங்கள்' முதல்வர் சித்துவை கிண்டல் அடித்த குமாரசாமி
'டிரம்பின் பொருளாதார ஆலோசகராக மாறுங்கள்' முதல்வர் சித்துவை கிண்டல் அடித்த குமாரசாமி
ADDED : டிச 24, 2025 07:23 AM

பெங்களூரு: ''அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார ஆலோசகராக, சித்தராமையா மாறட்டும்,'' என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி கிண்டல் அடித்தார்.
சிக்கமகளூரின் பாலேஹொன்னுாரில், அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, அடுத்த பட்ஜெட்டை நானே தாக்கல் செய்வேன் என்று கூறுகிறார். துணை முதல்வர் சிவகுமாரோ, அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்ய, அனைத்து ஏற்பாடுகளையும் செ ய்கிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து மாநிலத்தை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களும், மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இல்லை. எங்களுக்கு வேண்டியது மக்களின் நலனும், மாநிலத்தின் வளர்ச்சியுமே.
மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. சித்தராமையாவின் ஹெலிகாப்டர் பயணத்திற்காக, 47 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், காரில் தான் பயணிக்கிறேன். ஹெலிகாப்டரில் செல்வது தவறு என்று நான் சொல்லவில்லை. அதற்காக அரை மணி நேர பயணத்திற்கு கூட, ஹெலிகாப்டரில் செல்வது தவறு.
புதிது, புதிதாக வரி விதிப்பதில் சித்தராமையா நிபுணர். அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும், புதிது புதிதாக வரிகளை விதிக்கிறார்.
இதனால், டிரம்பின் பொருளாதார ஆலோசகராக சித்தராமையா மாற வேண்டும். இவருக்கு இருக்கும் பொருளாதார அறிவுக்கு, கர்நாடகா மிகவும் சிறிய மாநிலம்.
இவரது பொருளாதார அறிவை, அமெரிக்காவில் பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

