/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே கட்சியில் இருப்போர் பேசக்கூடாதா? சதீஷ் ஜார்கிஹோளி, ராஜேந்திரா கேள்வி
/
ஒரே கட்சியில் இருப்போர் பேசக்கூடாதா? சதீஷ் ஜார்கிஹோளி, ராஜேந்திரா கேள்வி
ஒரே கட்சியில் இருப்போர் பேசக்கூடாதா? சதீஷ் ஜார்கிஹோளி, ராஜேந்திரா கேள்வி
ஒரே கட்சியில் இருப்போர் பேசக்கூடாதா? சதீஷ் ஜார்கிஹோளி, ராஜேந்திரா கேள்வி
ADDED : டிச 24, 2025 07:23 AM

பாகல்கோட்: துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் ராஜண்ணா சந்தித்து கொண்ட விவகாரத்தில், ஒரே கட்சியில் இருப்போர் பேசக்கூடாதா என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா மகன் ராஜேந்திரா ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கர்நாடக அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் துணை முதல்வர் சிவகுமாரும், முன்னாள் அமைச்சர் ராஜண்ணாவும், இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தனர். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பாகல்கோட்டில் நேற்று கூறுகையில், ''டில்லியில் வரும், 27ம் தேதி, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கலந்து கொள்ளும்படி, சித்தராமையாவுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. ஆனால், அவருக்கு கண்டிப்பாக அழைப்பு வந்தே தீரும். ராஜண்ணாவும், சிவகுமாரும் சந்தித்த போது, என்ன பேசி கொண்டனர் என்று தெரியவில்லை. அவர்கள் சந்திப்பை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. ஒரே கட்சியில் இருப்போர் பேசக் கூடாதா. நான் யாருடைய அணியிலும் இல்லை. நடுநிலையாக உள்ளேன்,'' என்றார்.
ராஜண்ணா மகனும், எம்.எல்.சி.,யுமான ராஜேந்திரா கூறுகையில், ''சிவகுமார் துணை முதல்வர். எங்கள் கட்சியின் தலைவர். அவருக்கு ராஜண்ணாவிடம் ஏதாவது பேச வேண்டி இருந்திருக்கலாம். அதனால், இருவரும் சந்தித்து இருக்கலாம். ஒரே கட்சியில் உள்ள இருவரும் சந்தித்து பேசினால் தவறா.
' 'சித்தராமையா பக்கம் நான் உள்ளேன் என்று, ராஜண்ணா தெளிவாக கூறி உள்ளார்,'' என்றார்.

