ADDED : மே 18, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
- நமது நிருபர் -:
தமிழகத்தின் கன்னியாகுமரியில் திருக்குறள் அறக்கட்டளை துவங்கியதன், 20ம் ஆண்டு விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பேசியதாவது:
பெங்களூரில் ஜூலை 5ம் தேதி புனித ஜோசப் பல்கலைக்கழகத்துடன் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து, ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது.
இம்மாநாட்டில், திருக்குறள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதோ, அந்த புத்தகங்கள் அனைத்தும் கண்ணாடி பேழையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மாநாட்டில் திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும், மனித நேய மாண்புகளும் என்ற சொல்லை மையமாக வைத்து, 25 துணை தலைப்புகளுடன் தமிழ் அறிஞர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
