/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நம்பெருமாள் கோவிலில் 20ம் தேதி கும்பாபிஷேகம்
/
நம்பெருமாள் கோவிலில் 20ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 16, 2025 08:42 AM
தங்கவயல், : ஆண்டர்சன்பேட்டை ஸ்ரீ நம்பெருமாள் ரங்கநாத சுவாமி கோவிலின் 126ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
கோவில் காப்பாளர் எம்.ஏ., ராமானுஜம், தலைவர் குமாரி யமுனாதேவி, செயலர் கே.ரங்கராஜ ராமானுஜ தாசர், ஆலய பிரதான அர்ச்சகர் ஆர்.ராமானுஜம் பட்டர், அர்ச்சகர்கள் என்.ஸ்ரீதரன் பட்டர் ஜே.குசேலன் பட்டர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
ஆண்டர்சன்பேட்டை ஸ்ரீ நம்பெருமாள் ரங்கநாத சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது.
அன்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, பகவத் பிரார்த்தனை, புண்ணியாஹவசனம், மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, மிருசங்கரஹணம், அங்குரார்ப்பணம், வேத பிரபந்த துவக்கம்.
அன்றும், மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும் 20ம் தேதி காலை: 6:30 மணிக்கு மங்கள இசை, புண்ணியாஹவசனம், கோ பூஜை, விஸ்வரூபம், நான்காம் கால நித்ய ஹோமம், நித்ய ஆராதனம், மூலமந்திர ஹோமம், மஹாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது.
காலை 9:45 மணிக்கு மூலவர் விமான கும்பாபிஷேகம்; 10:00 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, வேத பிரபந்த சாத்துமறை, தீர்த்த பிரசாத விநியோகம்; மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத நம்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்; இரவு 7:30 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

