'உஷா டெம்பிள் டிரஸ்ட்' கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
'உஷா டெம்பிள் டிரஸ்ட்' கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மே 02, 2026 03:43 AM
அ நிறம் | அளவு
ஜெயநகர்: ஜெயநகர் உஷா டெம்பிள் டிரஸ்ட் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
பெங்களூரு ஜெயநகர், 16 வது மெயின் 4வது பிளாக்கில், 'உஷா டெம்பிள் டிரஸ்ட்'க்கு உட்பட்ட கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
வித்யா கணபதி, வீர ஆஞ்சநேயருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை, 6:00 முதல் மதியம், 12:30 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சதீஷ், செயலர் திலீப், பொருளாளர் பி.ஜே.பட், டிரஸ்டிகள் ஹெச்.ஆர்.பை, விஜயா ஸ்ரீகந்தா, நரசிம்மன், சங்கர், கீர்த்திவாசன், சஞ்சய்குமார், பிரியா மாருதி, ஜெயந்தி ராவ் ஆகியோர் செய்து உள்ளனர்.
கோவில் அர்ச்சகர் சுரேஷ் குமார் ஆதரவுடன், கும்பாபிஷேகத்தை ஸ்ரீகந்த ஆச்சார் மற்றும் அவரது குழுவினர் நடத்த உள்ளனர்.
