sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இயற்கையின் அதிசயம் குன்ச்சிகல் நீர்வீழ்ச்சி

/

இயற்கையின் அதிசயம் குன்ச்சிகல் நீர்வீழ்ச்சி

இயற்கையின் அதிசயம் குன்ச்சிகல் நீர்வீழ்ச்சி

இயற்கையின் அதிசயம் குன்ச்சிகல் நீர்வீழ்ச்சி


ADDED : ஆக 27, 2025 10:43 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவின், ஷிவமொக்கா மலைப்பகுதி மாவட்டமாகும். இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. இம்மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும், இயற்கை எழில் மிகுந்த மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், உயரமான நீர் வீழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. சாகராவில் உள்ள ஜோக் நீர் வீழ்ச்சி, உலக பிரசித்தி பெற்றதாகும். அதே போன்று மற்றொரு அற்புதமான நீர் வீழ்ச்சியும், ஷிவமொக்காவில் உள்ளது.

ஷிவமொக்காவின், ஹொசநகரின், ஹுலிகல் கிராமத்தில் குன்ச்சிகல் நீர் வீழ்ச்சி உள்ளது. இது இந்தியாவின், மிக உயரமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 1,493 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. 100 அடி அகலம் கொண்டது.

வராஹி ஆற்றில் இருந்து உருவாகும் இந்த நீர் வீழ்ச்சி, நீர் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது.

பொதுவாக மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை காண்பது, அற்புதமான காட்சியாக இருக்கும். மனதை கொள்ளை கொள்ளும். இதை பார்க்கும் போது, அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சியை கண்ட அனுபவம் ஏற்படும்.

குன்ச்சிகல் நீர் வீழ்ச்சி பூலோக சொர்க்கமாகு ம். தானே வழி வகுத்து கொண்டு, நீர் பாய்ந்து செல்லும் அழகை ரசிக்க, இரண்டு கண்கள் போதாது. நகரங்களில் இயந்திரத்தனமான வாழ்க்கையால் சலிப்படைந்துள்ளவர்களுக்கு, குன்ச்சி நீர் வீழ்ச்சி சிறந்த இடமாகும் .

சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த வனப்பகுதியில், இந்த நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. சிறிது நேரம் இங்கு பொழுது போக்கினால், மனம் அமைதி அடையும். இதே காரணத்தால், பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் அதிகம் வருகின்றனர்.

மலையேற்றம் செய்வோரும் அதிகம். குன்ச்சிகல் நீர் வீழ்ச்சியை ரசிக்க விரும்பினால், வனப்பகுதி பாதையில் செல்ல வேண்டும்.

இயற்கையை ரசித்தபடி நடப்பது, இனிமையான அனுபவத்தை கொடுக்கும். நீர் வீழ்ச்சியின் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு பறவைகள், விலங்குகள், அபூர்வமான தாவரங்களை காணலாம். போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தகுந்த இடம்.

போட்டோ ஷூட், வீடியோ எடுக்கலாம். அடர்த்தியான வனப்பகுதி என்பதால், வழிகாட்டியை உடன் அழைத்து செல்வது நல்லது.

இங்கு கேம்பிங் செய்யவும் அனுமதி உள்ளது. நீர் வீழ்ச்சி அருகிலோ அல்லது வனத்திலோ டென்ட் போட்டு, ஒரு இரவை கழிக்கலாம். ஆனால் இதற்கு வனத்துறையின் அனுமதி பெறுவது கட்டாயம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us