/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் கோலாரில் மெத்தனம்

ADDED : மே 10, 2025 11:45 PM

கோலார்: கோலார் மாவட்ட ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.
கோலார் மாவட்டத்தில் 75,194 ஏக்கர் பரப்பளவில் 3,232 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளை பலர் ஆக்கிரமித்து, பயிரிட்டுள்ளனர்.
சில பகுதிகளில் தங்கள் சொந்த நிலத்தை போல, கம்பி வேலி அமைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஏரியின் தாழ்வான பகுதிகளில் மண்ணால் நிரப்பி சமன் செய்துள்ளனர்.
சிலர், ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் 5,939 ஏக்கர் கொண்ட 402 ஏரிகள் ஆய்வு செய்யப்பட்டன. 344 ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளன.
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முடுக்கி விட்ட கலெக்டர் ரவி, ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார். ஆனாலும் பணிகள், ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன.
'ஏரிகளின் மேம்பாடு, சீரமைப்பு தொடர்புடைய துறைகள், அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது; ஏரியின் எல்லைகள் கணக்கெடுப்பு; ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்வது; ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
'ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின், சம்பந்தப்பட்ட துறையிடம் ஏரியை ஒப்படைப்பது; துறை அதிகாரியை நோடல் அதிகாரியாக நியமித்து உத்தரவிடுவது; அத்துமீறல் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்றும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கோலார், மே 10-
கோலார் மாவட்ட ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோலார் மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 402 ஏரிகளில் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. முல்பாகல், சீனிவாசபுராவில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் மட்டும் பணிகள் நடந்துள்ளன. மற்ற தாலுகாகளிலும் பணிகள் நடக்கும். ஆக்கிரமிப்புகள் அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- -எம்.ஆர்.ரவி, கலெக்டர், கோலார்.