/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற 4 மூலஸ்தானங்கள் கொண்ட லட்சுமி தேவி கோவில்
/
கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற 4 மூலஸ்தானங்கள் கொண்ட லட்சுமி தேவி கோவில்
கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற 4 மூலஸ்தானங்கள் கொண்ட லட்சுமி தேவி கோவில்
கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற 4 மூலஸ்தானங்கள் கொண்ட லட்சுமி தேவி கோவில்
ADDED : நவ 25, 2025 05:49 AM

பல கோவில்களுக்கு சென்று, தரிசனம் செய்திருந்தாலும், சில கோவில்களின் கட்டட அமைப்பு, நம் மனதில் அழியாமல் இடம் பிடித்துவிடும். ஹாசனின் லட்சுமி தேவி கோவிலின் கட்டட அமைப்பு மிகவும் அற்புதமானது. அந்த காலத்து கட்டட கலை வல்லுநர்களின் திறமைக்கு சாட்சியாக உள்ளது.
ஹாசன் நகரின் தொட்டகதஹள்ளி கிராமத்தில் புராண பிரசித்தி பெற்ற லட்சுமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது. இதன் அழகை ரசிக்க, இரண்டு கண்கள் போதாது. இதை கட்டியவரின் கலை ரசனையை நினைத்து, வியக்காமல் இருக்க முடியாது; கோவிலை சுற்றிக் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை தெரிந்து கொள்வோமா?
வைர வியாபாரி ஹாசனின் தொட்டகதவள்ளி கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி கோவில், ஹொய்சாளர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முதல் கோவில் என, வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இதை 1014ல் மஹாராஷ்டிராவின் கல்யாண் ராவத் என்ற வைர வியாபாரி கட்டினாராம். ஒரே கோவிலில் நான்கு சன்னிதிகள் உள்ளன. ஒன்பது கலச கோபுரங்களையும் காணலாம்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், எந்த காரணத்தை கொண்டும், சாஷ்டாங்கமாக கீழே படுத்து நமஸ்கரிக்கக் கூடாது. நின்று கொண்டே, லட்சுமியை நமஸ்கரிக்க வேண்டும்.
ஏன் என்றால், இங்கு நான்கு திசைகளிலும் ஒவ்வொரு கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
லட்சுமி தேவியுடன் மஹாகாளி, சிவன், விஷ்ணுவர்த்தன் குடிகொண்டுள்ள அபூர்வமான கோவிலாக திகழ்கிறது. மஹாகாளி, ஷம்பசிம்ஹா என்ற ராட்சதனை வதம் செய்த பின், இக்கோவிலுக்கு வந்து நிலைத்து நின்றதாக ஐதீகம்.
மற்ற கோவில்களில் லட்சுமி தேவி, அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார்.
இந்த கோவிலில் நின்றபடி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது அபூர்வமான விக்ரகமாகும்.
சிவனின் கோபத்தை கட்டுப்படுத்த, அவரது எதிரே பார்வதி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்திருப்பர். இக்கோவிலில சிவனின் எதிரே அவரது தங்கை லட்சுமி தேவியை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
நட்சத்திர வடிவம் அதே போன்று, மஹாகாளியின் கோபத்தை தணித்து சாந்தப்படுத்த, அவரது அண்ணன் விஷ்ணுவை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அண்ணன், தங்கை எதிரும், புதிருமாக காட்சி தருவது மிகவும் அரிது. கோவில் நட்சத்திர வடிவில் உள்ளது.
லட்சுமி தேவியின் பாதங்களை, இங்கு காணலாம்.செல்வங்களை அள்ளித்தருவது மஹாலட்சுமி.
குடும்பத்தில் கடன் தொல்லை, பணக்கஷ்டம், பிரச்னைகள் இருந்தால், தொட்டகதவள்ளி லட்சுமி தேவி கோவிலுக்கு வந்து, பக்தியுடன் வேண்டினால், கஷ்டங்கள் பனி போன்று விலகி செல்லும் என்பது ஐதீகம். தொழிலிலும் நஷ்டம் இருந்தாலும் சரியாகும். எனவே வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அந்த நாளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
ஹாசனுக்கு வரும் சுற்றுலா பயணியர், இங்குள்ள சுற்றுலா தலங்களுடன், அபூர்வமான லட்சுமி தேவி கோவிலை காண மறக்காதீர்கள்.
- நமது நிருபர் -

