/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் மலர் கண்காட்சி ரூ.2.78 கோடி வருமானம்
/
லால்பாக் மலர் கண்காட்சி ரூ.2.78 கோடி வருமானம்
ADDED : ஆக 20, 2025 07:57 AM
பெங்களூரு : லால்பாக் மலர் கண்காட்சியை 6.24 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம், தோட்டக்கலைத் துறைக்கு 2.78 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரின் லால்பாக் தாவரவியல் பூங்காவில், 7 முதல் 18ம் தேதி வரை, 218வது மலர் கண்காட்சி நடந்தது. வீர ராணி கித்துார் சென்னம்மா, கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் வீரத்தை பறைசாற்றும் விதமாக நடந்தது. இந்த மலர் கண்காட்சியை பார்க்க, பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தனர்.
கண்காட்சியின் கடைசி நாளான, 18ம் தேதி 27,310 பேர் பார்வையிட்டனர். இதில், 16,950 மாணவர்கள், 7,960 பெரியவர்கள், 2,400 சிறுவர், சிறுமியர் அடங்குவர். இவர்கள் வாங்கிய டிக்கெட் மூலம் 3.45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
இது போல, 12 நாட்கள் நடந்த கண்காட்சியில், 6.24 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதன் மூலம் 2.78 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.
தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஜெகதீஷ் கூறுகையில், ''லால்பாக் பூங்காவை துாய்மை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. கூடுதல் பணியாளர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் பணியில் உள்ளனர். பூங்காவை துாய்மையாக வைத்திருப்பதே முக்கிய கடமை,'' என்றார்.