தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'டிரிப்டிங்' செய்த லம்போர்கினி காரின் பதிவு சான்றிதழ் ரத்து?

 'டிரிப்டிங்' செய்த லம்போர்கினி காரின் பதிவு சான்றிதழ் ரத்து?

 'டிரிப்டிங்' செய்த லம்போர்கினி காரின் பதிவு சான்றிதழ் ரத்து?


ADDED : மார் 22, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.: பெங்களூரு எம்.ஜி., சாலையில், 'டிரிப்டிங்' செய்த, 'லம்போர்கினி' காரின் உரிமையாளரை போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு எம்.ஜி., சாலையின் அனில் கும்ப்ளே சதுக்கத்தில், வேகமாக சென்ற வெள்ளை நிற லம்போர்கினி கார் ஒன்று, 'டிரிப்டிங்' எனும் சறுக்கியபடி சென்றது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சிலர், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதன் அடிப்படையில், கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அனில் கும்ப்ளே சதுக்கம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், காரின் எண் கேஏ - 05 என்ஆர் 0009 என்று தெரியவந்தது.

இது குறித்து மேற்கு மண்டல போக்குவரத்து பொறுப்பாளர் டி.சி.பி., சாஹில் பங்களா கூறுகையில், ''நேற்று அதிகாலை 2:00 முதல் 3:00 மணியளவில் அந்த கார், டிரிப்டிங் செய்தபடி சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காரின் உரிமையாளர் மீது கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காரின் பதிவு சான்றிதழை ரத்து செய்யும்படி, ஆர்.டி.ஓ., எனும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us