ADDED : ஏப் 09, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலஹங்கா: போலி ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, எலஹங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் மற்றவர்களின் சொத்துகளுக்கு தன் பெயரில் போலி ஆவணங்கள் உருவாக்குவார். பின்னர், அவற்றை மற்றவர்களிடம் விற்று மோசடி செய்து வந்தார்.
இது குறித்து, எலஹங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்பு இருவர் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக கோவாவில் தலைமறைவாக இருந்த பிரதீப், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்கள் மூலம் இடத்தை விற்று, கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.