/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
/
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
ADDED : மே 07, 2025 08:52 AM
பெங்களூரு : “கன்னடர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்,” என, கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கன்னடர்களை பற்றி அவதுாறாக பேசிய பாடகர் சோனு நிகம் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். கர்நாடகாவிற்கு வந்து பாடல்களை பாடி பணம் சம்பாதித்துவிட்டு, கன்னடர்களை பற்றி தரக்குறைவாக பேசுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
சோனு நிகமை கைது செய்வது பற்றி, முதல்வர், உள்துறை அமைச்சருடன் பேசுவேன். இறந்த வீட்டில் அரசியல் செய்வது தான் பா.ஜ., கலாசாரம். சுகாஸ் ஷெட்டி பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது பா.ஜ., ஆட்சியில் தான். இப்போது அவரது கொலையை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.