தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வக்கீலின் கொலை கண்டுபிடிப்பு ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது

வக்கீலின் கொலை கண்டுபிடிப்பு ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது

வக்கீலின் கொலை கண்டுபிடிப்பு ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சாலையில் விழுந்து இறந்த வக்கீல், மாரடைப்பால் இறக்கவில்லை. அது கொலை என்பதை, போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரின், நாகரபாவி வட்ட சாலை அருகில், அக்டோபர் 9ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, வக்கீல் ஸ்ரீராம் என்பவர் மயங்கி விழுந்தார்.

இதையறிந்து அங்கு வந்த ஹொய்சளா போலீசார், ஸ்ரீராமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், மதியம் 3:00 மணிக்கு அவர் இறந்தார்.

ஆரம்பத்தில் ஸ்ரீராம் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். போலீசாரும் இயல்பான இறப்பு என, வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஸ்ரீராமின் உடலில் காய அடையாளங்கள் இருந்ததை கண்டு, குடும்பத்தினர் சந்தேகித்து, போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பின் போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, கொலை ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது.

அக்டோபர் 9ம் தேதியன்று, அம்பேத்கர் கல்லுாரி அருகில், வக்கீல் ஸ்ரீராம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

வீட்டுக்கு ஆட்டோவில் செல்ல நினைத்து, ஆட்டோ ஓட்டுநர் மேகராஜனுடன் கட்டணம் பேசினார். கட்டணம் விஷயத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

அதன் பின், ஆட்டோ தேவையில்லை என, கூறி நடந்து சென்றார். கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மேகராஜன், தன் கூட்டாளிகளை வரவழைத்து, ஸ்ரீராமை பின்தொடர்ந்து சென்று, தகாத வார்த்தைகளில் திட்டி, தலையில் பலமாக தாக்கினார்.

அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு, தப்பியோடினார். தலையில் காயத்துடன் நடந்த ஸ்ரீராம், மயங்கி சாலையில் விழுந்தது விசாரணையில் தெரிந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையிலும், அவரது தலையில் ரத்தம் கட்டியிருப்பது தெரிந்தது.

அதன் பின், அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார், ஆட்டோ ஓட்டுநர் மேகராஜனை கண்டுபிடித்து, விசாரித்த போது நடந்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us